பி.பாலசுப்ரமணியத்தின் வாழ்க்கை வரலாற்றோடு நீதிக்கட்சி வரலாறு, திராவிட இயக்க வரலாறு என சுதந்திரத்துக்கு முந்தைய தமிழக அரசியல் வரலாற்றைத் தகுந்த சான்றுகளோடு விவரித்துச் சொல்கிறார் நூல் ஆசிரியர் செ.அருள்செல்வன், பி.பா என்ற ஒரு மனிதரைச் சுற்றி நிகழ்ந்திருக்கும் அத்தனை செய்திகளையும் ஒன்றுவிடாமல் திரட்டி தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.
அரசியலை அறிந்துகொள்ள முயல்பவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இந்த நூல் முக்கியமான ஓர் ஆவணம்.