அண்ணா அருமை அண்ணா
அறிஞ அண்ணாவின் நட்பு வளையத்தில் இவரும் ஒருவர். அரசியலுக்கு இவரை இழுத்தது பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று நான்கு முதல்வர்களுடன் சேர்ந்து அரசியல் பணி செய்தவர். ஆனால் இந்த நான்கு பேரிடம் தனது கருத்தை துணிச்சலுடன் சொன்ன தைரியசாலி, ஜி.வி என்று எல்லோராலும் உரிமையுடன் அழைக்கப்படும் ஜி.விசுவநாதன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் சரி, சட்ட மன்ற உறுப்பினராக இருந்தபோதும் சரி, அமைச்சராக இருந்தபோதும் மக்களுக்காக உழைத்த மனிதநேயர்.
அண்ணாவுடன் இருந்த பழகிய நினைவுகளை அசைபோட்டு அனுபவித்து எழுதிய புத்தகம்தான் இது.