அகம் புறம்
கஷ்டப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்கள் என்கிற விவிலிய அடையாளத்தை வாழ்க்கை தொடர்ந்து உச்சரித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஒருசுமைதாங்கியின் முக்கியத்துவம், எந்த ஒரு நடுகல்லின் முக்கியதுவத்துக்கும் குறைந்தது அல்ல. நிழல் மரங்களுக்கு அறுகில் நடப்பட்டு இருக்கிற சுமைதாங்கிகளுக்குப் பெரிய வடிவமைபுகள் எதுவும் அவசியமில்லை. இரண்டு கல்தூண்கள், மேலே குறுக்கே ஒரு கல்பாலம். நின்றவாக்கில் உங்கள் தலைச்சுமைகளை இறக்கிக் கொள்ளலாம்.
இப்படிப்பட்ட வசீகர தமிழ் நடையில் அமைந்த இந்த நூலில் எழுத்துத் தூரிகையால் காவிய ஓவியமாக்கியிருக்கிறார் நூலாசிரியர் வண்ணதாசன்.
வண்ணதாசன், விகடன் பிரசுரம், டிஸ்கவரி புக் பேலஸ்