எதையும் விலகி நின்று வேடிக்கைப் பார்ப்பவரல்ல...மாதவன்.உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் தனது பங்களிப்பையும் குறைவின்றி செய்பவர்.களத்தில் நின்று பணிகளைச் செய்யும் திறனும் மனமும் படைத்தவர்.எதையும் கற்றுக் கொள்வதில் மட்டுமல்ல ,கற்றுக் கொடுப்பதிலும் வல்லவர்.
‘அக வரிகள்’என்று நம்முன் ஓடிக்கொண்டேயிருக்கும் இந்தத் தெள்ளிய நீரோட்டத்தில் சட்டென்று ஈர்க்கும் வண்ண மலர்களும்,அழைக்கும் தளிர்களும்,வெயிலில் மின்னும் வைரப் பொட்டுகளும், மேலாகப் பறந்து செல்லும் பறவைகளின் குரல்களும் நம் கண்களுக்கும் செவிக்குமான சிந்தனை விருந்தாக அமைந்துள்ளன.