1941 கிள்ளான் தொழிலாளர் கிளர்ச்சி
1941. மலாயா. நினைவின் அடியாழத்தில் உறைந்து போய்விட்ட ஒரு மாபெரும் நிகழ்வு. வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்ட ஒரு மகோன்னதமான போராட்டம்.
காடழித்து நாடக்கும் கடின உழைப்பில் ரப்பர்ப் பாலாய் வழிந்த தமிழர்களின் இரத்தம். முதலாளிகளால் மண்ணில் புதைக்கப்பட்டு, ரப்பர் மரங்களாய் வளர்ந்து நின்ற தமிழர்களின் எலும்புகள். காற்றின் திசையெங்கும் பரவிநின்ற கொத்தடிமை முறை. மூச்சுமுட்ட வைக்கும் வெள்ளைத் திமிர்.
தமிழர்கள் மரித்தனர். அவர்களின் உடல்கள் மண்ணுக்கு உணவாயின. ரப்பர் மரங்களில் பவுண்டுகள் விளைந்தன. எழுதிவைக்க யாருமின்றி மடிந்தன வரலாறுகள். இதற்கிடையில் யாராலிம் கொல்ல முடியாததாக திமிறி நின்றது தமிழ்மக்களின் விடுதலை உணர்வு.
அந்த விடுதலை உணர்வின் காட்சிவடிவமாய் வெளிப்பாடு கண்டதே கிள்ளார் தொழிலாளர் கிளர்ச்சி. ஆர்.எச்.நாதன் போன்ற பல விடுதலையாளர்கள் பிறந்த்தும் இக்கிளர்ச்சியினுடேதான்.
ஒடுக்குமுறையிலும் சரி, அதன் எதிர்த்த போராட்ட்த்திலும் சரி, மூப்பென்றுமில்லை, குஞ்சென்றுமில்லை,. ஆனால் உலகைக் குலுக்கிய இரண்டாம் உலகப் போரில் மறதிக்குள்ளாக்கப்பட்டது இந்த மாபெரும் கிளர்ச்சி.
நினைவின் அடியாழத்திலிருந்து இப்போராட்டத்தைப் பற்றிய வரலாற்றை மேலே சுமந்து வருகிறது இந்நூல்.