இந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்காட்டிக்கொண்டிருந்த சிப்பாய்கள் தங்கள் எதிர்ப்பை, கோபத்தை, தேசப்பற்றை பட்டவர்த்தனமாகப் பதிவு செய்த வருடம் அது. 1857 புரட்சி திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது தன்னெழுச்சியானதா? இதில் மதத்தின் பங்கு என்ன? புரட்சி நசுக்கப்பட்டதன் பின்னணி என்ன? தோல்விக்கு என்ன காரணம்? சிப்பாய் புரட்சியின் ஒவ்வொரு அசைவையும் கண்முன் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர் உமா சம்பத்.