ஆயிஷா நடராஜனின் ஆயிஷா என்கிற நெடுங்கதை ஆசிரிய மனங்களில் ஏற்படுத்திய தாக்கம் எத்தனை வலிமையானது என்பதை மதன் குமாரின் கதைகள் வரை அது பாய்ந்திருப்பதை வைத்து உணரலாம். ஆயிஷாவைப்போல ஒரு கதாபாத்திரம்தான் அறிவுடைநம்பி. அவன் கேட்கும் எளிமையான நேரடியான கேள்விகள் முடுண்ட இதயம் கொண்ட ஆசிரியர்களைக் கதிகலங்க வைத்து அவன் மீது அவர்கள் வெறுப்புக்கொள்ளும்படி செய்கின்றன. நல்ல ஆசிரியர்கள் திறந்த மனதுடன் அவனைக் கொண்டாடுகிறார்கள். தாயும், தகப்பனும் சரியில்லாத உறவில் இருக்கையில் தன் ஆட்டுக்குட்டியே உலகம் என்று வாழும் சிறுவனாக அவன் மாறிவிடும் யதார்த்தம்தான் கதையின் அச்சு. பள்ளிக்கு ஆட்டுக்குட்டியை அழைத்து வந்து வகுப்பில் ஒரு கண்ணும் குட்டியின் மீது ஒரு கண்ணுமாக அவன் படிக்கும் காட்சி நெகிழவைக்கும் பகுதியாகும்.
பத்துக்கதைகளோடு கதை உலகுக்குள் நுழையும் இளம் படைப்பாளி மதன் குமாரை இருகரம் நீட்டி வரவேற்போம். இன்னும் கூர்மையான சமூகப்பார்வையுடனும் பரந்த- ஆழ்ந்த வாசிப்புடனும் அவர் தன் அடுத்தடுத்த தப்படிகளை எடுத்து வைப்பார் என நம்பி அவரை வாழ்த்தி வரவேற்போம்.
- ச.தமிழ்ச்செல்வன்
No product review yet. Be the first to review this product.