மருத்துவம் இன்று பகல்கொள்ளையாக உருவெடுத்திருக்கிறது. அதிலும் கார்ப்பரேட் என்ற பெரும் தொழிலாக மாறிய பிறகு அன்பு, கருணை, ஈவு, இரக்கம் என்ற பண்புகளைத் தொலைத்துவிட்ட கொடூரமாக மருத்துவம் மாறிவிட்டது. மருந்து உற்பத்தியாளர்களும் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் அரசும்கூட இன்றைய மருத்துவத்தால் மக்கள் படும் அவலத்தை மதிப்பவர்களாய் இல்லை. ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’ என்ற கூற்றுப் போல ‘மருத்துவரே தெய்வம், மருந்துகளே பிரசாதம்’ என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். இந்தச் சூழலில் நம்முடைய சிந்தனைக்கும் நல்வாழ்வுக்கும் ஒரு கருணை மழை போல டாக்டர் முகமது அலீம் இந்த அரிய நூலைப் படைத்திருக்கிறார்.
- பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்பிரமணியன்.
தன்னிடம் மருத்துவத்துக்காக வருபவர்களுடன், மருத்துவர் முகமது அலீம் அவர்கள் நடத்தும் உரையாடல் முறை புகழ்பெற்றது. மருத்துவத்துக்காக அவரை நாடி வரும் மக்களுக்குத் தெளிவும் நம்பிக்கையும் அளிக்கும் ஓர் அமைதியான நீரோடை போன்றது. அதேபோல் இந்த நூலிலும் ஒவ்வொருவர் மீதும் அன்பும் அக்கறையும் கொண்ட ஒரு நண்பரின் அறிவுரை போல அவரது எழுத்து அமைந்திருக்கிறது. நாம் எப்போதோ படித்த சிறுவர் கதைகளில் இருந்து பெரியவர்களின் வாழ்க்கைக்கான பாடங்களைச் சொல்வது மருத்துவர் முகமது அலீம் அவர்களின் உத்தி. அந்த உத்தியை இந்த நூலில் மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். இந்த நூலைப் படிக்கும்போது எந்தவிதத் தடையோ மனச்சோர்வோ ஏற்படுவதில்லை. மிகச் சிக்கலான வணிக அரசியலைக்கூட படிப்பவர்களுக்கு அழகாகப் புரியவைத்து விடுகிறது, மருத்துவரின் எளிமையான விளக்கமுறை.
- வழக்கறிஞர் அ.அருள்மொழி.
No product review yet. Be the first to review this product.