படித்தவர்கள் எழுதுகிறார்கள்...
‘உலகில் சிந்திக்கிற,எழுதுகிற,அறிவால் இயங்குகிற கைகள் அதற்கான மரியாதையைப் பெற்று விடுகின்றன’என்று எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருந்தது அவருக்கும் பொருந்தும்! -அ.குணசேகரன்,புவனகிரி.
குழந்தைகளோட கேள்விகளுக்கு தகுந்த பதில் சொல்ல தெரியலன்னாலும்,அவர்களோட கேள்வி ஞானத்தை நாம தடை செய்யக்கூடதுன்னு ‘முறிந்த கேள்விகள்!’ கட்டுரையைப் படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்.ரொம்ப தேங்ஸ்! -சிவசங்கரி,புதுப்பேட்டை.
‘குழந்தைகளின் சகோதர உணர்வுகளுக்கு வேலி இடுவதால் மட்டும் அவற்றை உருக்குலைத்துவிட முடியாது’என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்த ‘எதற்காக இந்த முள்வேலி?’என்ற பகுதி,இன்றைய சமுதாயத்தின் அவலங்களை எடுத்துரைத்தது சிறப்பு.எஸ்.ரா-வுக்கு வாழ்த்துகள்!
பள்ளிப் பிள்ளைகள் பாடம் படிப்பது இருக்கட்டும்...பள்ளி நடத்துபவர்கள் ஒழுங்காக பாடம் கற்றுக்கொண்டால்தான் அறிவுக்கண் திறக்கும் கோயிலாக பள்ளிகளை மாற்ற முடியும்.பள்ளி நிர்வாகிகள்-பெற்றோர்-ஆசிரியர்கள்-மாணவர்கள் என்ற உறவு நிலையை ‘கல்வி கடைகள்!’என்ற அத்தியாயம் தெளிவாக எடுத்துச் சொல்லி உணர வைத்தது. -பி.பரமசிவம்,தேனி.
எஸ்.ராமகிருஷ்ணன் நேர்த்தியான எழுத்துகளால் சுடர்விட்டுப் பிரகாசித்த ‘சிறிது வெளிச்சம்’ என்னை போன்றவர்களின் மனதில் அறியாமை என்ற இருளை அகற்றி வெளிச்சம் பூசி நிற்கிறது! -பா.செளந்திர பாண்டி,மதுரை-1