தனித்தனியாக வாசித்த இரண்டு கதைகளோடு சேர்த்து பத்து கதைகளையும் மொத்தமாக வாசிக்கும்போது அம்பிகாவர்ஷினியின் கதைசொல்லும் முறையும் கதைக்கான பொருண்மைகளை அவர் தெரிவுசெய்யும் நுட்பமும், கதாபாத்திரங்கள் இருக்கும், நகரும் இடங்களையும் அதன் சூழலையும் விவரிக்கும் மொழிநடையும் குறிப்பிடத் தக்கனவாக இருப்பதை உணர்கிறேன். எப்போதும் ‘நான்’ எனத் தன்மைக் கூற்றில் கதைசொல்லும் அம்பிகாவர்ஷினியின் கதைகள், அவரது சொந்தக் கதைகளோ என்ற தோற்றத்தை உருவாக்கக் கூடியன. தனியாக ஒரு கதையை வாசிக்கும்போது தோன்றும் அந்த உணர்வை, மொத்தமாக வாசிக்கும்போது அவை தகர்த்துவிட்டன. ஒவ்வொரு கதையிலும் கதை சொல்லும் ‘நான்’ வேறொரு நபர் பெரும்பாலும் பெண்ணாக இருக்கிறாள் என்பது குறிப்பிடப்பட வேண்டியது.
- அ.ராமசாமி
No product review yet. Be the first to review this product.