முந்தைய தொகுதியில் அண்டை நாட்டுப் புனிதப் பயணியாக நுழைந்த யுவான் சுவாங் இத்தொகுதியில் இந்தியராகவே மாறிவிட்ட நிலையைக்
காணலாம்.
உதயனா, தக்ஷசீலா, காஷ்மீர்,ராஜபுரம், மதுரா, அயோத்தியா, பிரயாகை, சிரஸ்வதி போன்ற தற்கால இந்தியப் பகுதிகளெல்லாம் தனித்தனி நாடுகளாகக்
கோலோச்சிய காலத்தில் தான் கொண்ட சமயப்பற்றால் உந்தப்பட்டு அளவறிந்த இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் இடையே அயர்வறியாது தொடரும்
யுவான் சுவாங் இந்தியப் பயணம் வியப்பளிப்பதுடன் ஆர்வமூட்டக் கூடியதாகவும் இருக்கிறது.