நான்கு வேதங்களில் ரிக்கிற்கு அடுத்தபடியாக கூறப்படும் நூல் யஜீர் வேதம்.முற்கால ஆசிரியரின் வருகையையும் வாழ்க்கையையும் சமஸ்கிருத தொல் இலக்கியமான ரிக் வேதம் கூறுவது போல பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்கு முறைகளைப் பற்றி யஜீர் வேதம் கூறுகிறது.
கிருஷ்ண யஜீர் வேதம் ,சுக்கில யஜீர் வேதம் என இரு பிரிவுகளாக யஜீர் வேதம் பிரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ண யஜீர் வேதம் ஏழு காண்டங்களையும் , சுக்கில யஜீர் வேதம் நாற்பது அத்தியாயங்களையும் கொண்டுள்ளது.
தமிழில் வெளிவரும் இப்பதிப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் சேர்ந்த தொகுப்பாக வெளியிடப்படுகிறது.வேதகால சமூகத்தை அறிந்துகொள்ள தமிழ் வாசகர்களுக்கு இத்தொகுப்பு உதவும்.