அழகியசிங்கார்
1988ம் ஆண்டிலிருந்து வெளிவரும் 'நவீன விருட்சம்’ பத்திரிக்கையின் ஆசிரியர்.இவருடைய ‘ஆங்கிள்’என்ற கதைக்கு கதா விருதும், ‘யுகாந்தா’ என்ற மொழிபெயர்ப்புப் புத்தகத்திற்கு திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருதும் கிடைத்துள்ளது.தொடர்ந்து கதைகள்,கட்டுரைகள்,கவிதைகள் எழுதிக்கொண்டு வருகிறார்.கிட்டத்தட்ட 10 புத்தகங்கள் இவர் பெயரில் இதுவரை வெளிவந்துள்ளன.
என்.ஆர்.கோவிந்தராஜன்
52 வயதாகிறது.ஆடிட்டராக 30 ஆண்டுகள் பணிபுரிகிறார்.இலக்கியத்தில் நாட்டம் அதிகம்.குறிப்பாக சிறுகதைகள் படிப்பதில் ஆர்வம்.வ.ரா.முதல் எஸ்.ரா.வரை பல எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்துக்கொண்டிருக்கிறார்.நவீன விருட்சம் பத்திரிகையுடன் சேர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இலக்கியக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.