’ போனியோ காடுகள் ‘ என்ற முதற் கட்டுரையில் தொடங்கி ‘ வண்ண வண்ண வண்டுகள் . என்ற இறுதி கட்டுரை வரை 21 தலைப்புகலில்
புதுப்புது செய்திகளையும் , வியப்பூட்டும் விஞ்ஞான நிகழ்வுகளாகவும் ஆசிரியர் தரும் விபரங்கள் படிப்போரைக் கவர்ந்திழுக்கின்றன. பல ஆங்கிலச்
சொற்களுக்கு மிக அருமையான தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்து உபயோகித்திருக்கும் ஆசிரியரின் தமிழ் உணர்வைப் பாராட்ட வேண்டும்.
வாழ்க்கையையே ஒரு பரிசோதனைக் கூடமாக ஏற்று செயலாற்றி வரும் எனக்கு மன நிறைவைத் தந்தது ‘ விஞ்ஞானத்தின் விந்தைகள்’
என்ற இந்த நூல். பள்ளி மாணவர்களுக்கு துணைப்பாடமாக வைக்க ஏற்புடைய நூல் என்ற மகிழ்வான கருத்தைப் படிப்போர் புரிந்து கொள்வார்கள்
- எம்.கணேசன்