கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்லும்பவர்கள் தமிழ் மக்கள், இங்கு கோவில்களுக்குப் பஞ்சமில்லை அவை ஒவ்வோன்றிற்கும் ஒரு வரலாற்றுப் பின்னனியும் பெருமையும் பிணிகளைத் தீர்த்து அருள்பாலிக்கும் தன்மையும் உண்டு.
ஆனால் நமக்கு பக்கத்திலேயே கோவிலை வைத்துக் கொண்டு தூரத்திலுள்ள கோவில்களைத் தேடிச் செல்வதுதான் நம் பழக்கம், காரணம் நமக்கு நம் ஊர்க் கோவிலின் அருமையும் பெருமையும் தெறியவில்லை, இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தெடி அலையும் பாமரர்களாகத்தான் நாம் இன்றும் இருக்கிறோம்.