“ அதிகாலைப் பல்லவன்”
ஒரு கவிதைப் புதினம் :
கவிதை நளினம்;
கற்பனையும் சொற்புனைவுமில்லா அற்புதப் படைப்பு.
இதில் கவிஞ மனம் - காதலன் மனம் - கணவன் மனம் - தந்தை மனம் எனக் கதைத் தலைவனின் நான்கு
வகைப்பட்ட மனங்களின் போராட்டம் மாண்புறச்
சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
மிகச் சிறந்த அகத்துறை இலக்கியமாகப் பளிச்சிடுவதைக் காணலாம்.