நிர்வாகம் செயல்பாடுகள், பொருளாதாரம், பொது பணம் வியாபாரம் மற்றும் வர்த்தகம் ஆகியவை கொண்ட ஒரு சாசனம்தான் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம். இதில் கூறியுள்ளவை 600 வருடங்களுக்கு முன்பு கூறப்பட்டிருந்தாலும் இன்றைக்கும் உகந்ததாக உள்ளது. அவருடைய உயர்வான எண்ணங்கள் இன்றைய மாறிக் கொண்டே வரும் மிகவும் சக்தி வாய்ந்த பொருளாதார சூழலுக்கு ஏற்றவாறு உள்ளது.
கௌடில்யர், சாணக்கியர் என்னும் அழைக்க இவர் இந்தியாவின் அரசியல் பொருளாதார நிபுணர். அரசியல் நிர்வாகத்திற்க்கு பொருளாதார செயல்பாடுகள்தான் ஊக்க சக்தியாக உள்ளது என்று அவர் கருதினார். ஒரு நாட்டிற்கு இரானுவத்தை விட அதிக முக்கியதுவம் வருவாய் பெறுவதில் உள்ளது.