புதிய பொருள் ஒன்றைத் தயாரித்துவிட்டீர்கள். அதனை மக்களிடம் எப்படி எடுத்துச்செல்லப் போகிறீர்கள்? உங்கள் பொருளை மக்கள் ஏன் வாங்கவேண்டும்? விளம்பரங்கள் இல்லாவிட்டால் உங்கள் பொருளையோ சேவையையோ மக்களிடம் ஒழுங்காக எடுத்துச்செல்லக்கூட உங்களால் முடியாது. அதுவும் சரியான விளம்பரங்கள் இல்லையேல், உங்கள் பணம் வீண்தான்.
விளம்பரம் என்பது கலையும் அறிவியலும் கலந்த ஒரு தொழில்நுட்பம். எத்தனை தரமான பொருளாக இருந்தாலும் அதனை அழகான விளம்பரமாக உருவாக்கத் தெரியாவிட்டால் பிரயோஜனம் இல்லை.
இன்று நாம் அனைவரும் விளம்பரங்கள் சூழ்ந்த ஓர் உலகில்தான் வசிக்கிறோம். வீட்டில் தொலைக்காட்சி, ரேடியோ, பத்திரிகைகள். வீதியில் இறங்கினால், விளம்பரத் தட்டிகள். விட்டால் நம் முதுகிலேயே விளம்பர போஸ்டரை ஒட்டிவிட்டுப் போய்விடு-வார்கள். இவ்வளவு லட்சம் விளம்பரங்களுக்கு இடையே, மக்களின் கவனத்தை ஈர்த்து, அவர்கள் மனத்தில் பதியுமாறு விளம்பரம் செய்வது எப்படி?
விளம்பரம் என்றால் என்ன?
குறிப்பிட்ட ஒரு பொருள் அல்லது சேவைக்கான விளம்பரத் திட்டத்தை எப்படி முடிவுசெய்வது?
வெற்றிகரமான விளம்பரங்களை எப்படி உருவாக்குவது?
விளம்பர உத்திகளைக் கையாண்டு விற்பனையை அதிகப்படுத்துவது எப்படி?
விளம்பரங்களில் பெண்கள் அதிகம் தோன்றுவது ஏன்?
வர்த்தகர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் பயனளிக்கக்கூடிய நூல் இது.