திராவிடக்கட்சி ஆளும் அமைப்பாக மாறிய பின் இனி அரசியல் பேசவேண்டிய தேவை திராவிடத் திரைக்கு இல்லாமல் போனதுடன் அரசியல் பேசுவது என்பதும் திட்டமிட்டு தடுக்கப்பட்டது. எம்.ஜி.ராமச்சத்திரன் தமிழக முதலமைச்சர் ஆனபின் தமிழ்த்திரையின் ‘பாவனை அரசியலின்’ தேவை முற்றுபெற்றது. அரசியல் சொல்லாடலின் துணைவடிவமாக இருந்த திரைப்படம் பண்பாட்டுப் பாலியலின் களமாகத் தன் முழு வடிவத்தை மாற்றிக்கொண்டது.