ஹோ-சி மின் எனும் அந்த மாமேதையின் வரலாற்றை ஆங்கிலத்தில் இருந்து டாக்டர் வெ.ஜீவானந்தம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.நூலுக்கு “சிவப்பு காந்தியும்-ஹனாய் வார்தாவும்,” என்னும் தலைப்பை மிக மிகப் பெருத்தமாகக் கொடுத்திருக்கிறார் அவர்.இந்த நூலை வாசிக்கும் போது இதை மொழிபெயர்ப்பாக உணர முடியவில்லை.
மார்க்சியத்தின் மீதும்,பன்முகச் சிறப்புகள் கொண்ட நம் நாட்டின் மீதும்,மக்கள் வாழ்வின் மீதும்,அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மனிதநேயர்களும்,தேசபக்தர்களும்,ஜனநாயகவாதிகளும்,இடதுசாரிகளும் படித்துப் பயன்பெற வேண்டிய அருமையான நெர்மையான நூல் இது.