வெற்றிக்கொடிகட்டு
ஒரு பிரச்சனையை சமாளிப்பது என்பது வேறு, அதற்கு தீர்வுகாண்பது என்பது வேறு, உதாரணமாக சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கோ, எழுதுவதற்கோ, கஷ்டமாக இருந்தால் அவசரத்தேவைக்கு அமிர்த்தாஞ்சனை பயன்படுத்துவதைப்போல ரெபிடெக்சை வைத்து சமாளிக்கலாம். ஆனால் சுயமாக ஆங்கிலத்திலேயே சிந்திக்க வேண்டுமென்றால்? மன்னிக்கவும் இந்த சேவைக்கான வசதி தங்களிடம் இல்லை. என்று அடிமனதிலிருந்து, ஒரு குரல் ஒலிக்கும். அது ஆழ்மனதில் உங்களை அறியாமலேயே பதிவான ஒரு வாய்ப்பாடு.
ஒருவர் படித்து வளர்ந்த சூழலும் அவரைப் பாதித்த சம்பவங்களும்தான இதற்குக் காரணம் ஒருவருடைய ஆழ்மனதில் அடிக்கப்பட்ட ஆணியைஅகற்ற் முடியுமா? தன்னைத்தானே ஒருவரால் புடம் போட்டுக்கொள்ள முடியுமா? என்றால் முடியும் என்பதே இந்தப் பத்தகம் தரும் பதில்.
விலையும் பயிர் முளையிலே தெரியும், நம் வாழ்க்கையை சற்றுப்பின்னோக்கிப் பார்த்தால் நம் வாழ்விற்கான வித்து ஒரு சிறிய பாராட்டிலோ பெரிய பேரிழப்பிலோ பொதிந்திருந்த்து தெரியும்.
ஒரு திறன் வெளிப்படுவதற்கான விசை எந்த திசையிலிருந்து வருகிறது என்பதை க்ரஹித்துக்கொள்ளும் விழிப்புணர்வோடு ஒருவர் இருந்தால் விரும்பியதெல்லாம் அவருக்குக் கிடைக்கும் என்கிறார் இந்தப் புத்தகத்தில் நாகூர் ரூமி.