‘வெள்ள நீர் உலகில் விரி பகை தவிர்த்த நான் என் உள்உறை பகைஞரை ஒழிக்க விரும்பினேன்’
- தசரதனின் மொழியாக கம்பர் பாடும் இச்செய்யுளில் ஆராய்ந்து அனுபவிக்க வேண்டிய அற்புதமான கவிநயம் ஒன்று அமைந்துள்ளது.வெளியில் உள்ள பகைவர்கள் உயர்திணை.காமம்,வெகுளி என உள்ளத்தில் இருக்கும் தீயகுணங்கள் அஃறிணை.ஆனால்,கம்பர் வெளிப்பகைவர்களை பகை என்றும்,உட்பகையை பகைஞர் என்றும் மாற்றிப் பாடுகிறார்.முயன்றால் வெளியில் உள்ள பகைவர்களை அழித்துவிடலாம்.ஆனால்,உள்ளுக்குள் உள்ள அரக்க குணங்களை முயற்சி செய்தாலும் அழிப்பது மிகக் கடினம் என்னும் அர்த்தம் விளங்கவே அவ்வாறு உயர்திணையில் வைக்கிறார் கவியரசர் கம்பர்.
- வாழ்வாங்கு வாழலாம் - இரண்டாம் பாகம் என்ற இந்தத் தேன்குடத்திலிருந்து ஒரு துளி!