வானம் இன்னை வணங்கும்
தியாரூ என்கிற இளைய இமயம் இயிரோடிருக்கிறது. இது நடக்கிற நதி. பாய்கிற பறவை. விண்ணுக்கும் மண்ணுக்கும் முடிச்சிடுகிற வித்தக விரல். மயான சந்தியிலும் பிரம்மக் காற்றாய் பிறந்து தவழுகிற படைப்பாளி. பிரம்மாவிற்கே ஐந்தாவது மகத்தைவைக்கிற அசுர ராட்சன்.
தியாரூ தமிழ் நில்த்திற்கு கிடைக்காமல் கிடைத்தவன். எந்த தாய் செய்த தவமோ, தமிழுக்கு இவன் கிடைத்தான் ஆழக்கடலில் மூழ்கி மூச்சடக்கி வந்த முயற்சிகள் அல்ல இவன் கவிதைகள். கீட்சின் ‘செடிகளில் வந்த இலைகளைப்போல்’ வாலிவனுக்கு வந்த அரும்பு மீசைபோல, இளையவளின் கன்னத்தில் சதிராடும் நாணக் குழிபோல இயற்கையாய் கவிதை இவனிடத்தில் அரும்பியதைக் கண்டு ஆனந்திக்கிறேன்.