வலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்
பறவைகள் மட்டுமின்றி, பலவித பாலுட்டிகள், விலங்குகள், வண்ணத்துபூச்சிகள், மீன்கள் எனப் பல உயிரின்ங்கள் உணவு, இருப்பிடம், வாழ்விடப் பாதிப்பு எனப் பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயர்ந்தாலும், பறவைகளின் இடம்பெயர்தலே, முழுமையான “வலசை” யாக அவதானிக்கப்படுகிறது. சூழலுக்கும், மற்ற உயிரின்ங்களுக்கும், மனிஉத சமூகத்திற்கும் நன்மை பயப்பதாகவே பறவைகளின் வலசை அமைந்துள்ளது. மனிதனால் இன்னமும் முழுமையாக விளக்கிகொள்ள முடியாத புதிர்களை உள்ளடக்கியதாகவும் வலசை விளங்குகிறது.