மதராஸப்பட்டிணத்தின் வரலாற்றில் இன்னும் எழுத்தப்படாத பக்கங்கள் காலத்தின் மெளனத்திற்குள் புரண்டுகொண்டிருக்கின்றன. அந்த வகையில் பத்தொண்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த நகரத்தில் நடந்த நிகழ்வுகளை எதார்த்தமும் அதிபுனைவும் கவித்துவமும் இழையோட, குறுக்கு வெட்டுத்தோற்றத்தில் படம்பிடித்து காட்டுகிறது இந்நாவல். இந்தியாவின் முதல் அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டு சமூக நீதிக்கான முதல் குரல் ஒலிக்கத்தொடங்கிய பின்புலத்தில் எழுதப்பட்ட இந்தக்கதை நம்பிக்கைக்கும் துரோகத்திற்க்கும் இடையில் ஊசலாடும் மனிதர்களின் தவிப்பையும் அதிகாரத்திக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்குமிடையில் நடக்கும் முரணையும் மையக்கருவாகக் கொண்டது.