/files/ungal kulandai yarudaiyathu_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

உங்கள் குழந்தை யாருடையது?

(0)
ungal kuzhanthai yaarudaiyadhu
Price: 200.00

Book Type
கட்டுரை, குழந்தை வளர்ப்பு
Publisher Year
2020
உங்கள் குழந்தை யாருடையது?
ஜெயராணி

நம் குழந்தைகளை அறிவாளியாக்க முயல்கிறோம் என்று நினைத்துக் கொண்டு, படிப்பாளியாக மாற்றி விடுகிறோம். அறிவு சுடர் விடும் பருவத்தில் மனப்பாடத்தை மட்டுமே கற்றுத்தருகிறோம். நாம் தவறாகக் கற்று வைத்திருக்கும் சாதி அடிப்படையிலான சமூக மதிப்பீடுகளை, பாலின ரீதியான சமமற்ற தன்மையை, பொருளாதாரம் குறித்த மிகை கற்பனைகளை உள்வாங்கிக் கொண்ட நவீன மிருகங்களாக நம் குழந்தைகளை நாமே தயாரிக்கிறோம். இப்படியாக, குழந்தை வளர்ப்பு குறித்த அடிப்படைகள் புரியாத – கற்றல் என்றால் என்னவென்று தெரியாத – கல்வி குறித்த புரிதலே இல்லாத பெற்றோர்களாக நாம் இருக்கிறோம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்வது அவசியம். கண்டிப்பான பெற்றோர் அல்லது செல்லம் கொடுக்கும் பெற்றோர் என இரண்டே வகைகளில் இந்தியப் பெற்றோர்களை அடக்கி விட முடியும் என்ற உண்மையை கன்னத்தில் அறைவது போலச் சொல்கிறது இந்நூல். இந்தக் கட்டுரைகளின் வழியே பேசும் எழுத்தாளர் ஜெயராணியின் சொற்கள் சில இடங்களில் நமக்கு வலி தருவதாக இருந்தாலும் கூட, நம் குழந்தைகளின் எதிர்கால முழுமை கருதி இவற்றை உள்வாங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது. குழந்தை வளர்ப்பின் ஒவ்வொரு படிநிலையையும் ஒரு பத்திரிகையாளராக தான் உள்வாங்கிய நிகழ்வுகளின் மீது, தான் சொல்ல விரும்பும் கருத்தினை தன்னனுபவமாக முன்வைக்கிறார் நூலாசிரியர்.

- அ. உமர் பாரூக்
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.