மதங்களும் முந்தின தலைமுறையினரும் சொன்னதையே தன் போதனைகளாகத் திருப்பிச் சொல்லாமல்,எதையும் நேரடியாக வேர் வரை உணர்ந்து அனுபவித்து அவற்றையே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்பவர்.ஒவ்வொரு தனி மனிதனும் எல்லையில்லா ஆனந்த நிலையை அனுபவித்து உணர,கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ‘ஈஷா யோக மைய’த்தை நிறுவியவர்.உலகெங்கும் பல இலட்சம் மனிதர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய சத்குருவாக முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.