உள்ளம் நெகிழும் ஓரியக் கதைகள்
“உள்ளம் நெகிழும் ஓரியக் கதைகள்” எனும் இக்கதைத் தொகுப்பு the Bed of Arrows and other stories என்னும் ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இதில் கோபிநாத் மோகந்தி எழுதிய அற்புதமான பதிமூன்று ஒரியமொழிக்கதைகள், இந்தியப் பெருங்கவிஞர்களில் ஒருவரான சீத்தாகந்த் மகாபத்ராவின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து ஆனைவாரி ஆனந்தன் அவர்களின் இனிய தமிழ்நடையில் தமிழ்க் கதையுலகுக்கு அறிமுகமாகின்றன. இக்கதைகள் மொகந்திக்கு மலைக்குடி மக்கள் மீது இருந்த பேரன்பையும், நாட்டுப்புறத்துக்குப் பெண்களின் சுய கௌரவமும் சங்கடமான நிலைமையையும், சுதந்திரத்துக்குப்பின் இந்தியக் கிராமப் புறத்தில் வீசிய புதிய அரசியல் தாக்கம் எப்படி இருந்த்து என்பதையும் படம்பிடித்துக் காட்டுக்கின்றது.
தொகுப்பு: கோபிநாத் மொகந்தி, தமிழாக்கம்: முனைவர் ஆனைவாரி ஆனந்தன்