1. உலக மதங்கள் 40 ஐப் பற்றிய அரிய தகவல்கள்
திரு. சி. வ. இரத்தினசிங்கம் அவர்கள் இலங்கையின் வடபகுதியிலுள்ள சாவகச்சேரியில் சைவப்பரம்பரையில் உதித்தவர். பிரசித்திபெற்ற சாவகச்சேரி இந்துக்கல்லுரியில் கல்வி கற்று உள்ளூர்சேவையில் சேர்ந்து எழுதுவினைஞர், நகராட்சி மன்றச் செயலாளர், நிர்வாக உத்தியொகத்தர் மற்றும் விசேட ஆணையாளர் போன்ற பதவிகளை வகித்து 30ஆண்டுகள் சேவையாற்றிய பின்னர் ஓய்வுபெற்றவர். சைவ மதத்திலும், தமிழ் மொழியிலும் ஆழ்ந்த பற்றுள்ளவர். தாயகத்தை விட்டு புலம் பெயர்ந்த தனது உறவினர்களும், நண்பர்களும் அவர் தம் வாரிசுகளும் தமிழையும், சைவத்தையும் மறந்து வழும் அவல நிலையைகண்டு உளம் வெதும்பி ”பஞ்சபுராணத் திரட்டு” என்றபெயரில் தேவாரம் முதலிய பக்தி பாடல்களைத் தொகுத்து கணினியில் அச்சுப்பதித்து30 பிரதிகள் எடுத்து அவர்களுக்கு அனுப்பியுள்ளார். சைவத்தை காக்க எதாவதொன்றைச் செய்யவேண்டும் என்ற நன்நேக்கில் அதே நூலை மேலும் விரிவுபடுத்தி “இளைய தலை முறைக்கு பன்னிரு திருமுறைகள் திரட்டு” என்ற பெயரில் “திருமுறை திரட்டு” நூல் ஒன்றை தொகுத்து வெளியிட்டார்.
ஆசிரியர் : சி. வ. இரத்தினசிங்கம்