உலக நடப்புகளைத் தெரிந்து கொள்வது அவசியம்தான். உள்ளூர் நடப்புகளைத் தெரிந்து கொள்வதும் நல்லதுதான், ஆனால் இவற்றை விட
மிக முக்கியமானது நம் ‘ உடலூர்’ பிரச்சனைகளை அறிந்து கொள்வது...
எல்லா பிரச்சனைகளுக்கும் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்களைத் தேடிச் செல்லும் மனோபாவம் இப்போது எல்லோருக்கும் வந்துவிட்டது.
ஒரு ஸ்பெஷலிஸ்ட், தான் சார்ந்த விஷயத்தை மட்டுமே பார்ப்பார். உதாரணமாக, நெஞ்சு எரிச்சல் என ஒரு இதய நோய் நிபுணரிடம் போனால்,
இதயம் தொடர்பான பரிசோதனைகளை செய்து பார்த்துவிட்டு, “ உங்கள் இதயம் நன்றாக இருக்கிறது” என அனுப்பி விடுவார். ஆனால் நெஞ்சு
எரிச்சலுக்கு தீர்வு கிடைக்காது.
வயிற்றில் பிரச்சனையா? தொண்டையில் நோய்த்தொற்றா? இப்படி பதில் தெரியாத கேள்விகளோடு ஒவ்வொரு நிபுணாரிடம் போக வேண்டியிருக்கும்.
அடிப்படையான சில விஷயங்களை நாமே தெரிந்து வைத்திருந்தால், இந்த சிக்கல் இல்லை. சாதாரண தலைவலி, ஜுரத்தில் ஆரம்பித்து அம்னீஷியா
வரை எல்லாம் ஏன் வருகிறது? என்ன அறிகுறி? தடுக்கும் வழிகள் என்ன?
இப்படி எல்லாம் சொல்லும் இந்த நூல், ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அனுபவப் பெட்டகம்!