குற்றப்பரம்பரை என்று சபிக்கப்பட்டு புறமொதுக்கித்தள்ளப்பட்ட பழங்குடி இனமக்களின் வாழ்க்கைப் பாடுகளும், வாழ்தலின் தேவைக்காக தங்களின் அடையாளங்களை இழந்து அலைக்கழிவதும் அதன் கனங்களோடு வெளிப்படுகின்றன இந்நூலில். திருடர்கள் என இனங்காணப்பட்டு அவ்வடிப்படையிலேயே அரசும், அதிகாரமும், சமூகமும் காட்டும் வினைகளை எதிர்கொள்ளத் திராணியற்று, உணவுக்கும், உடைக்கும், இருப்பிடத்திற்கும், அடிப்படைத் தேவைகளுக்கும் காலமெல்லாம் அல்லாடிக் களைத்து அவமானத்துக்கும், இழிவுகளுக்கும் தண்டனைகளுக்கும் உள்ளாகும் ஒரு இனத்தின் அவலங்களின் தொகுப்பே இந்நூல்.