மென்பொருள் நிறுவனங்களைச் சார்ந்து உருவாகியுள்ள புதிய, சமூக பண்பாட்டு வெளிகள் குறித்த பொதுப்புத்தியை இத்தொகுப்பின் சில கதைகள் கேள்விக்குட்படுத்துகின்றன. இப்புனைவு நிலத்தில் உருவாகிய கதைகள்நாம் கார்த்திக் பாலசுப்பிரமணியனின் அடையாளமாக இருக்கக்கூடும். இந்த புதிய நிலத்தின் நுண்மையான ஒடுக்குமுறை வடிவங்கள், மனிதத் துடிப்புகள், வாழ்வுச் சலனங்கள் போன்றவற்றைக் குறித்தும் பாதுகாவலர்கள், வாகன ஒட்டிகள், உணவகச் சிப்பந்திகள், துப்புரவாளர்கள் என தகவல் தொழில் நுட்பத்தின் புதிய தொழிலகங்களில் அலைவுறும் உதிரிமானுடத்தின் பார்வையில் ஐடி என்னும் வண்ணமிகு உலகை நோக்கியும் படரவிருக்கும் இவரின் படைப்புத் தளத்திற்கான விதைகள் இத்தொகுப்பில் தளிர்விட்டிருக்கின்றன எனலாம்.
- த.ராஜன்.