நூலாசிரியர் முனைவர் ர.பூங்குன்றன் தமிழ் இலக்கியத்திலும் கல்வெட்டியலிலும் நன்கு தேர்ந்தவர்.கூடவே மானிடவியல் போன்ற சமூக அறிவியல் கருத்தாக்கங்களை உள்வாங்கி அவற்றைப் பழந்தமிழக வரலாற்றை விளக்குவதற்குப் பயன்படுத்தி வருபவர்.பண்டைய இந்திய வரலாறு தொடர்பாகச் செய்யப்பட்டு வரும் உராய்வுகளை ஆர்வமாகப் படித்து,அவற்றைத் தமிழக வரலாற்றுக்குப் பொருத்திப் பார்க்க முனைந்து வருகிறார்.
அந்த வகையில் தமிழக வரலாற்றின் தொடக்க காலத்தைப் பற்றி இந்த நூலில் ஆழமாகச் சிந்தித்துள்ளார்.தொல்குடிகள் தொடங்கி வேந்தர் எழுச்சி முடிய அக்கால அரசியல் மற்றும் சமூகப் போக்குகளை விளக்கியுள்ளார்...
பழந்தமிழகத்தைப் பற்றித் தெளிவு பெறவும்,மேலும் ஆராயவும் இந்த நூல் மிகவும் உதவும்.