திணை மரபும் நவீனமும்
தமிழ்ச் செவ்விலக்கியங்களின் ஆன்மா திணைக் கருத்தியல். திணை மரபானது செவ்வில்க்கியங்களில் மட்டுமின்றி, நவீன இலக்கியங்கள் வரை அதனின் தடம் நீள்கிறது. குறிப்பாக, நவீன இல்க்கிய வடிவங்களில் ஒன்றான நாவல் வெகு சிறப்பாக உள்வாங்கியுள்ளது. திணை சார்ந்த நாவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சமகால்த்தில், திணைக் கோட்பாட்டை நாவல்களில் ஆராயும் முறைக்கும், கோட்பாட்டைப் புரிந்துகொள்வதற்கும் இந்நூல் வழிவகுக்கும்.