எழுதுபவர்களில் இரண்டு விதம் உண்டு:மூளைக்கு எழுதுபவர்கள்,இதயத்துக்கு எழுதுபவர்கள்.சோம வள்ளியப்பன் இரண்டுக்குமாக எழுதுபவர்.இன்றைக்கு தமிழகம் முழுவதும் சோம வள்ளியப்பனின் வாழ்வியல்,நிர்வாகவியல் வகுப்புகள் பிரபலம்.கடினமான விஷயங்களை மிக எளிமையாக எடுத்துச் சொல்லும் அவரது பாணி அபூர்வமானது.
சோம வள்ளியப்பன் எழுதியுள்ள ‘டீன் தரிகிட’ என்னும் இந்தப் புத்தகம் பதின் பருவம் எனப்படும் டீன் ஏஜில் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் இயல்பாக ஏற்படக்கூடிய சலனங்களை அழகாக வரிசைப்படுத்திக் காட்டுவதுடன்,அவற்றில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டியதன் அவசியத்தைத் தோழமையுடன் எடுத்துச் சொல்லுகிறது.