எனக்குக் கிடைத்த நண்பர்களில் தி.க.சி. வித்தியாசமானவர். என்னிடமுள்ள நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டவர். சுமார் அறுபது ஆண்டுகளாக எங்கள் நட்பு நீடித்து வருகிறது. நான் மாறிக் கொண்டே வந்திருக்கிறேன் பலபல விசயங்களில். அவர் மட்டும் அச்சு அசல் தி.க.சி.யாகவே இருந்து வருகிறார். ‘மூத்த பிள்ளை’ என்று எங்களுக்குள் நாங்கள் தி.க.சி.யை குறிப்பிட்டுக் கொள்வோம். தி.க.சி.யை எதோடு ஒப்பிட்டுச் சொல்லுவது என்று நினைக்கிறபோது எனக்கு அவரை சுக்குக்கு ஒப்பிட்டுச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. ரசிகமணி சொல்லுவார்: “நாக்குக்குத்தான் சுக்கு காரம்; குடலுக்கு ரொம்ப இதம்.” சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் உண்டா?