நகரத்தில் பொருந்திக் கொண்டிருக்கிற கிராமத்தானின் மன ஓட்டங்களை பதிவு செய்பவை நந்தன் ஸ்ரீதரனின் கதைகள். கம்பம் பள்ளத்தாக்கு மக்களின் வாழ்வோடு ஒன்றியிருக்கும் கதைகளை ஒரு கை தேர்ந்த கதைச் சொல்லியில் லாவகத்தோடு நம் அருகில் அமர்ந்து நம் மனதுள் கதைகளை விதைத்துச் செல்கிறார். வேகமாக மாறிக்கொண்டிருக்கும் சமூகத்தின் சில அழுக்குகளையும் அவமானங்களையும் அழுத்தமாக பதிவு செய்கிறார்.
தேர்ந்த மொழி நடைக்கும் கதைகளில் உலவும் கதாப்பாத்திரங்களுக்காகவும் தமிழ் சிறுகதை தொகுப்புகளில் முக்கியமான இடத்தை தாழி சிறுகதைத் தொகுப்பு பெறுகிறது
No product review yet. Be the first to review this product.