தேர்ந்த கதைசொல்லியான தஞ்சை ப்ரகாஷ் தொகுத்த இக்கதைகள் தொகுக்கப்பட்ட காலத்தில் ‘தாமரை’ இதழில் தொடர்ந்து வெளிவந்தவை. இக்கதைகள் தஞ்சையின் புராண கால கற்பனை பட்டுமல்லாது, சில நூறு ஆண்டுகளுக்கு முந்தைய தஞ்சையின் கலாசாரத்தின் எதார்த்தையும் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது. பெரும் வியப்புகளும்,மாய உலகங்களுமாக விரிந்து, வெறும் நீதிக்கதைகளாக மட்டுமே நின்றுவிடும். பொதுவான கதை மரபிலிருந்து வேறுபட்டு, அம்மாய உலகங்களில் நமது வரலாற்றையும் இணைத்துக்கொண்டு தலைமுறைகள் கடந்து பயணிப்பதுதான் நாட்டுபுற கதைகளின் தனிச்சிறப்பு. இக்கதைகளும் அத்தகைய சிறப்புக்குரியதே.