தமிழில் திறனாய்வுப் பனுவல்கள்
இந்நூல் தமிழில் திறனாய்வின் வளர்நிலைகளையும் வீச்சுகளையும் அதன் பன்முகப்பட்ட பரிமாணங்களையும் தனித்திறனையும் காட்டுகிறது. அத்துடன் திறனாய்வாளரின் பிரதான பங்களிப்புக் களையும் தமிழ்த் திறனாய்வின் வரலாற்றினையும் புலப்படுத்துகிறது திறனாய்வு இல்லாத் இடத்தில் மனித இருப்பும் இல்லை என்பதை ஆழமாக உணர்ந்து இத்தொகுப்பு தொகுக்கப்பட்டுள்ளது.
தி.சு.நடராசன் (1939)
திறனாய்வு வல்லுநர் நா.வானமாமலை ஆய்வு வட்டத்தில் உருவாகி வளர்ந்தவர். மதிரை காமராசர் பல்கலைகழகத்தில் வருகை தரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். சாகித்ய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். திறனாய்வுக்கலை தமிழின் பன்பாட்டு வெளிகள், கவிதையெனும் மொழி, தமிழகத்தில் வைதீக சமயங்கள், வரலாறும் வக்கணைகளும் இவர் எழுதிய நூல்களாகும் . ரோமன் யாக்கப்சன், மாயகாவஸ்கி ஆகியொரின் திறனாய்வு நூல்களை முறையே மொழியியலும் கவிதையியலும் ‘எழுத்துக்கலை’ என்று மொழிபெயர்த்துள்ளார்.