தமிழகத்தில் கல்வி
கல்வியின் பயனை மொத்தச் சமூகம் பெறவில்லை என்றும், அஹில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன என்றும், உயர் ஜாதியினரும் வசதிபடைத்தவர்களும் பெறும் கல்வியை ஒடுக்கப்பட்ட மக்களும் ஏழைகளும் இன்று பெற முடியவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்துகிறார். ஆகவே தமிழ்வழிக் கல்வியில் அவர் கொண்டிருக்கும் நம்பிக்கை கல்வியின் குறிக்கோளில் அவர் கொண்டிருக்கும் ந்ம்பிக்கையோடு பின்னிப் பிணைந்து கிடக்கிறது. சமூகத்தைவிட்டு விலகி நிற்கும் கல்வி பயனற்றது என்பதே அவரது கருத்து.
வே. வசந்தி தேவியுடன் உரையாடல், சந்திப்பு: சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்