தமிழில் எழுதுபவர்களில் கவனிக்கப் பட வேண்டியவர் இவர்.இவர் சென்னை வாசி தான்.பணி நிமித்தம் ஐரோப்பா மற்றும் தாய்லாந்தில் குடும்பத்துடன் வசித்தவர் தற்பொழுது இந்தியாவில் பெண்களூரில் சாரி பெங்களூரில் குடியேறி உள்ளார்.தனியார் நிறுவனத்தின் ஆன இவரின் அறிமுகம் உங்களுக்கு மேலும் தேவையில்லை. சிறுகதை ஆசிரியர் ,நாடக ஆசிரியர் ,நடிகர் என பல முகங்களை கொண்ட ஆனந்த் ராகவ் தான் அவர்.
இவரின்
1.துளி விஷம்
2.டாக்ஸி ட்ரைவர்
என்கிற இரண்டு நூல்களையும் கொண்டு வாதினி பதிப்பகத்தார் சார்பில் நான் கொண்டு வந்துள்ளோம்.
முறையே 196 மற்றும் 172 பக்கங்களில் உயர்தர நேஷுரல் ஷேட் பேப்பரில் அச்சிடப்பட்டு நாலு வண்ண அட்டையுடன் டெமி சைசில் வெளி வந்துள்ளது
துளி விஷத்தில் 14 கதைகளும் டாக்ஸி டிரைவரில் 15 சிறுகதைகளும் உள்ளன.
முதல் நூலுக்கு எழுத்தாளர் பா.ராகவனும் இரண்டாவது நூலுக்கு எழுத்தாளர் யதார்த்தா கே.பெண்ணேஸ்வரணும் எழுதியுள்ளார்கள்.
ஆனந்த் ராகவின் சிறுகதைகள் பற்றி குறிப்பிடும் போது இரா.முருகன் தமிழின் நூறு சிறுகதைகளைப் பற்றி சொல்லும் போது வண்ண நிலவனின் எஸ்தருக்கு பக்கத்தில் இவரது துளி விஷம் கதை நிற்கும் என தெரிவித்துள்ளார்.
உங்கள் வீடு நூலகத்தையும் உங்கள் நண்பரின் வீட்டு நூலகத்திலும் இடம் பெற வேண்டிய நூல்.
ஆனந்த் ராகவ்
தமிழகத்தின் அனைத்து முன்னணி இதழ்களிலும் தடம் பதித்திருக்கிறார் ஆனந்த் ராகவ். அறுபது சிறுகதைகள், எழு மேடை நாடகங்கள், சரித்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள் அவர் இயங்கும் தளம். இலக்கியச் சிந்தனை அமைப்பின் விருது பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் நாடகங்களை எழுதி இயக்குகிறார். இவரது நாடகங்கள் நாற்பது முறை மேடையேற்றப்பட்டுள்ளன.
சரளமான விறுவிறுப்பான நடை, இயல்பான நகைச்சுவை ததும்பும் மொழி, சட்டென்று திசை மாறும் முடிவு என்று தனக்கென்று ஒரு பிரத்யேக நடையழகை உருவாக்கிக்கொண்டவர். அவரது எழுதில் மிகை இல்லை. ஆனந்தின் பார்வைத் துல்லியமும் எடுத்துக்கொள்ளும் கோணங்களும் அபூர்வமானவை. லயிப்புடன் ஊன்றி வாசிக்கச் செய்பவை.
பிரசுரிப்போர்
வாதினி பதிப்பகம்
No product review yet. Be the first to review this product.