தமிழ்ப் பாஷை – எழுநா வெளியீடு 10
தமிழ்ப்பாஷை என்னும் தமிழியல் ஆய்வும்
தத்தைவிடுதூது முதலான ஏனைய பிரபந்தங்களும்
தி.த.சரவணமுத்துப்பிள்ளை, பதிப்பாசிரியர் சற்குணம் சத்யதேவன்
எழுநா, நுாலகம் இணைந்த வெளியீடு – மே 2013, எழுநா நிதிக்கொடை மீள் வெளியீட்டுத்திட்டம் – 2
தமிழ்ப்பாஷையின் பிறப்பு, தமிழ் என்ற பெயர் ஏற்பட்டமைக்கான காரணம், தமிழ்ச் சங்கங்கள் இருந்தனவா? தமிழ்ப் பாஷையில் இருக்கும் இலக்கியங்கள், சமகாலத் தமிழ் மொழியின் நிலை, சமகாலத் தமிழ்ப் புலவரின் நிலை, மொழி பெயர்ப்பின் முக்கியத்துவம், தமிழ் மொழிப் பற்றின் அவசியம் போன்ற விடயங்களின் அடிப்படையில் தமிழ்மொழி, தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான முக்கியமான விடயங்களை 1892இல் முதன் முதலில் பேச முற்பட்டது
1865ம் ஆண்டு ஈழத்தின் திருகோணமலையில் தி.த சரவணமுத்துப்பிள்ளை பிறந்தார். தனது பதினைந்தாவது வயதிலேயே சென்னை சென்று அங்கு சென்னை பச்சையப்பப்பன் கல்லூரியிலும் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் கல்வி கற்றிருந்தார். “மோகனாங்கி” என்ற தமிழின் முதலாவது வரலாற்று நாவலை எழுதிய இவர் பாரதிக்கு முன்னோடியான ‘தத்தைவிடு தூது” என்ற பெண்விடுதலை செய்யுளையும் எழுதியவராவர். 1902 இல் தனது 37வது வயதில் இவர் இவ்வுலக வாழ்வை நீத்தார்.