ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்வும் பணியும்
ஸ்டீபன் ஹாக்கிங்கை நோய் மிக மெதுவாக பாதித்தது. லூக்காசியின் பேராசிரியராக ஆகும்போது, அவரால் நடக்க முடியாது, எழுத முடியாது, தானே சாப்பிட முடியாது. கீழே சாயும் தலையை அவரால் உயர்த்த முடியாது. ஆனால் ஹாக்கிங் அப்போதும் இப்போதும் கூட செயலற்றவர் இல்லை; என்றும் செயல்படுகின்ற கணதவியல் நிபுணர், இயற்பியல் அறிஞர். அப்போதே கூட அவரை ஐன்ஸ்டினுக்கு அடுத்த ஆற்றல்மிக்க அறிவியலாளர் என்று அழைத்தார்கள்.