சசாகியின் காகிதக் கொக்கு
கூடங்குளம் அணுமின் நிலையம் உரிய பாதுகாப்புகளுடன் செயல்படுகிறதா இல்லையா என்ற கேள்வியை மையப்படுத்தி உச்சநீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து வரும் தோழர் சந்தர்ராஜன் அணுசக்திக்கு எதிரான போராட்ட்த்தில் தன்னை இனைத்துக்கொண்டே இந்த வேலையைச் செய்து வருகிறார். இடிந்தக்கரை மக்களின் அக்கறைகள், கவலைகள், அமைதியான, நீதியான உலகை நோக்கிய அவர்களது தேடல்கள் ஆகியவற்றை பிறரும் அறிய வேண்டும் என்பதற்காக இருவரும் பிற தோழர்களும் பூவுலகின் நண்பர்கள் இதழில் இவை குறித்த செய்திகளை பதிவு செய்து வருகின்றன.
இந்த பணிகளிம் நீட்சியாக ஜப்பானுக்கு சென்று அணுசக்தி, அணுஆயுதங்களுக்கு எதிராக சிந்தித்து செயல்படுபவர்களை சுந்தர்ராஜன் கண்டும் பேசியும் வந்தார். அவரது ஜப்பானிய பயணம் பெற்று தந்த படிப்பினையை குழந்தைகளுக்கும் பிடிப்படும் எளிமையான அழகான மொழியில் இநூலில் பதிவு செய்துள்ளனர்.