மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் சமூகம், தேசம், பாஷை, மதம் இவற்றைக் கடந்து மனித இதயத்தின் ஆழத்தைக் கண்டு அந்த அனுபவத்தை பிறருக்கும் பங்கிட்டுக் கொடுப்பதே ஆசிரியனின் வேலை.
ின்னல்போல விநாடிக்கு விநாடி தோன்றி மறையும் அனுபவங்களை நிரந்தரமாக்குகிறது கலை.”
ி.சு. செல்லப்பாவின் எழுத்து பற்றித் தான் சொன்ன இந்த வார்த்தைகளுக்குத்
ன் எழுத்தின் மூலமாக உதாரணமாகத் திகழ்ந்தவர் ந. சிதம்பரசுப்பிரமணியன்.