சிவப்பு ரிக்ஷா
ஒரு சொல் குறைபடாமலும் தேர்ச்சியுடன் கச்சிதமாக உருவாக்கப்பட்டவை தி.ஜா.வின் கதைகள், தனது அனுபவ உலகத்தை முன்வக்க எந்தெந்த வடிவங்கள் துணையாக அமையுமோ என்று அந்தரங்கமாகப் பரிசீலித்தே தனது கதைகளை உருவாக்கியிருக்கிறார், அவற்றை வெகு அநாயாசமாகவே மேற்கொண்டிருக்கிறார் என்பதன் சான்று அந்தக் கதைகளில் மிளிரும் மேதைமை.