ஆரம்பநிலை வாசகர்களை மனதில் வைத்து ‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழில் வெளியான தொடரின் நூல் வடிவம் இது.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் மார்க்சிய,லெனினிய கோட்பாடுகளின் சுருக்கம் பெட்டிச்செய்தியாக இடம் பெற்றிருக்கிறது.எனவே ரஷ்ய,சீனப் புரட்சிகளின் வரலாற்றை மட்டுமல்ல...அந்த சரித்திரத்தை உருவாக்க காரணமாக அமைந்த சித்தாந்தத்தையும் இந்நூலின் வழியே அறியலாம்.
தமிழில் இதுபோன்ற ஒரு நூல் வருவது இதுதான் முதல்முறை.மட்டுமல்ல.இதற்கு முன் வேறு எந்த தமிழ் வெகுஜன பத்திரிகையும் இப்படியொரு கனமான தொடரை வெளியிட்டதில்லை.எல்லாவகையிலும் முன்னோடியாக திகழும் ‘தினகரன்’ குழுமம்,இதிலும் சாதனை படைத்திருக்கிறது.
இப்புத்தகம் நேற்றைய வரலாற்றை பதிவு செய்யவில்லை.மாறாக நாளைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறுவதற்கான தொடக்கநிலை கையேட்டை மக்கள் முன் சமர்பித்திருக்கிறது..