நூலாசிரியர் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று, கும்பகோணத்தில் 33 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சித்தர்கள், மகான்கள் மீது கொண்ட பிடிப்பால் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பொதிகைமலை, சதுரகிரிமலை, அண்ணாமலை, இமயமலை இன்னும்பல இடங்களுக்கும் சென்று வருபவர். சித்தர்கள், மகான்கள் அடங்கிய இடங்களுக்குச் சென்று வழிபடுவதைப் பெரு விருப்பமாகக் கொண்டவர். சித்தர் வழிபாட்டில் விருப்பமுடையவர்கள் பயன்பெற வேண்டி, தாம் சென்று வணங்கிய 300 க்கும் மேற்பட்ட பீடங்களையும், 150 இடங்களைப் பற்றிய குறிப்புகளையும் இந்நூலில் எழுதியுள்ளார். நூலாசிரியர் பல்வேறு கவிதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றவர். சித்தர் இயல்பு கூறும் தென்பொதிகை சித்தராற்றுப்படை எனும் நூலை செய்யுள் வடிவில் இயற்றியுள்ளார்.