சென்றுவா உறவே சென்றுவா
இந்நூலில் ரசமான காதல் செய்திகளோடு அறிவியல், புராணம், கலை, வரலாறு தொடர்பான பல சங்கதிகளையும், பின்னிக் கொடுத்திருக்கின்றென். படித்துப் பாருங்கள். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் ஞானவானாகப் போற்றப்படுபவன் சாலமோன் ஞானி. அவன் பாடிய ‘உன்னதப் பாட்டு’ ஒர் மிகச் சிற்ந்த காதல் காவியம்.
‘நேசம் மரணத்தைப்போல் வலிது; நேச வைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது. அதின் தழல் அக்கினித் தழலும் அதின் ஜுவாலை சுடும் ஜுவாலையுமாயிருக்கிறது’ என்று சொல்கிறான். அவனுடைய இந்த வரிகளே, என்னுடைய இந்தப் படைப்பின் அடிநாதம்மாய் அமைந்துள்ளது.