பெரும்பாலும் ஆண்களே கோலோச்சுகின்ற தமிழ்த் திரையுலகில் உருவான முன்மாதிரி இல்லாத துருவ நட்சத்திரம் சாவித்ரி. நடிகர் திலகம் சிவாஜிக்கு இணையான இன்னொரு நடிகரைச் சொல்வதற்கு இன்னமும்கூடத் தயக்கங்கள் இருக்கின்றன.ஆனால் சிவாஜி சிம்மாசனத்தில் இருந்த காலகட்டத்திலேயே நடிகையர் திலகம் என்ற புகழ்மொழி சாவித்ரிக்கு மட்டுமே சாத்தியமாகியிருந்திருக்கிறது.